நாக தரிசனம்
ஓவியம்: மணிவண்ணன்
தெருக்கோடியிலிருந்த தன் வீட்டெதிரே கும்பலொன்று கூடியிருந்ததைப் பார்த்ததும் மகேந்திரனுக்குப் ‘பகீர்’ என்றிருந்தது! ‘எதுவாக இருந்தாலும் இந்நேரத்திற்கு மனைவி நாகலட்சுமி தனக்குச் செய்தியைச் சொல்லியிருப்பாளே,’ என்ற சந்தேகத்துடனேயே பாக்கெட்டிலிருந்த கைப்பேசியை எடுத்துப் பார்த்தான். ஐந்து மிஸ்ட் கால்களில் அவள் சொல்லத் துடித்த அவசரம் தெரிந்தது. அலுவலகத்தில் கைப்பேசியின் ஒலியை அடைத்து வைத்தவன், அதை மீண்டும் திறந்துவிட மறந்திருந்தான். வீட்டிற்குள் நுழைந்த கையோடு இருக்கின்ற விசாரணையை நினைத்துப் பார்த்தான். ஒரே சலிப்பாய் இருந்தது. கும்பல் போட்டிருந்தவர்கள் எல்லோருமே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களாகவே இருப்பதுபோல் தெரிந்தது. அவர்கள் தங்களின் கைகளில் கம்புகளையும் கட்டைகளைய