நீதிமன்றத் தீர்ப்புகளும் இலங்கை அகதிகளும்
“மனுதாரர்கள் நெருங்கி 35 ஆண்டுகள் முகாம்களில் உள்ளார்கள். அவர்களைக் கண்காணிப்பின் கீழும் கடுமையான கட்டுப்பாடு கொண்ட நிலையிலும், நாடற்ற நிலையிலேயே இவ்வளவு ஆண்டுகள் வைத்திருப்பதுவும் நிச்சயமாக இந்திய அரசியல் சாசன சரத்து 21 இன் கீழ் அவர்கள் உரிமையை அவமதிப்பதாகும்.”
12.06.2019 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அகதிகள் குறித்து வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதிகள் 1983 கலவரத்தின் தொடக்கம்முதல் தமிழ்நாடு வர ஆரம்பித்து, பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 இலும் வந்துகொண்டிருக்கிறார்கள். அகதிகள் தமிழ்நாடு வர ஆரம்பித்து நாற்பது ஆண்டுகள் நெருங்கியிருக்கிறது.
<img alt="" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-281/andharam_FrontIma