நித்தியின் யாழ்ப்பாணக் காலம்
நித்தியானந்தனுக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரை நூற்றாண்டைத் தாண்டிய நட்பு. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் (அப்போது கொழும்பு வளாகம்) 1970இல் நாங்கள் முதல் முதல் சந்தித்தோம். அந்த ஆண்டில்தான் நான் பல்கலைக்கழக மாணவனாகச் சேர்ந்தேன். நித்தி, என்னைவிட மூன்று வயது இளையவர் என்றாலும் பல்கலைக்கழகத்தில் அவர் எனக்கு இரண்டு வருடம் சீனியர். நான் பத்து வருடங்கள் பாடசாலை ஆசிரியனாகப் பணியாற்றிவிட்டுத்தான் பல்கலைக்கழக மாணவனாகச் சேர்ந்தேன். அக்காலத்தில் இலக்கிய உலகில் நான் ஓரளவு அறியப்பட்டவனாக இருந்தேன். நித்தியின் எழுத்துகளும் அப்போது பத்திரிகைகளில் வெளிவந்துகொண்டிருந்தன. எழுத்தாளர்கள் என்ற வகையில் நாங்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்களாக இருந்தாலும் கொழும்பு வளாகத்தில்தான் நேர்முக அறிமுகம் கிடைத்தது; நட்பும் வேரூன்றியது. நாங்கள் இடதுசாரி சார்புடையவர்கள் என்ற வகையில் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமாகியது.
பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் 1976 ஜூனில் நான் ஆசிரியத் தொழிலைவிட்டு யாழ் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பதவிபெற்றுச் சென்றேன். நித்தியும் என்னைத் தொடர்ந்து அங்கு விரிவுரையாளரானார். நா