பேரப் பிள்ளைகள் கோலோச்சும் நாட்கள்
அமெரிக்காவின் அசாதாரணமான தன்மையின் விசுவாசியான அரசியல் விமர்சகர் தாமஸ் ஃப்ரீட்மேன் சொன்ன ஒரு சம்பவம் இந்தக் கட்டுரையைத் தொடங்க உதவியாக இருக்கும். அவர் சிறுவனாக இருந்தபோது சாப்பாட்டுத் தட்டில் உணவை மிச்சம் விட்டிருந்தால் அவருடைய தகப்பனார், ‘‘சீனர்களும் கொரியர்களும் இந்தியர்களும் பசியால் வாடுகிறார்கள்; உணவை வீணடிக்காதே; முழுவதையும் சாப்பிடு” என்று கண்டிப்பாராம். இப்போது ஃப்ரீட்மேன் தன்னுடைய மகன் எந்த உணவையும் தட்டில் மிச்சம் வைத்தால் அவனுக்குச் சொல்லும் எச்சரிக்கை: “முழுவதையும் சாப்பிடு. தெம்பு பெறு. கவனமாகப் படி. அல்லாவிட்டால் உனக்கு வரும் வேலையைச் சீனர்களும் இந்தியர்களும் எடுத்துவிடுவார்கள்.” இந்த வேலை அபகரிப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் நடந்திருக்கிறது.
பெஞ்சமின் டிஸ்ரேலி
<p