மே 2023
SIGN IN
SIGN UP
SUBSCRIBE
மே 2025
    • கட்டுரை
      நீதிமன்றத் தீர்ப்புகளும் இலங்கை அகதிகளும்
      கருமேனியாற்றங்கரையில் ஒரு காண்டாமிருகம்
      நித்தியின் யாழ்ப்பாணக் காலம்
      பேரப் பிள்ளைகள் கோலோச்சும் நாட்கள்
      அறியப்படாத ஆளுமை: கு. பரமசிவம்
    • கதை
      நீலமலை இளவரசி
      நாக தரிசனம்
    • மேடை
      புதுமைப்பித்தன்: மேடையில் உயிர்பெறும் சித்திரம்
    • வைக்கம் போராட்ட நூற்றாண்டு பிறகு அவர்கள் நடந்தார்கள்
      கண்ணழிந்து பெற்ற உரிமை
    • தொடர் 80+
      தொன்மொழிக்குள் தன்னைத் தொலைத்தவர்
    • எதிர்வினை - 2
      அடையாளத்தை வெளியிடாதிருக்கும் உரிமை
    • விருது
      விஜயா வாசகர் வட்டம் வாசகர்களைக் கௌரவிக்கும் விருது
      மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      பார்த்திபராஜாவின் மறுப்பு
    • மதிப்புரை
      ஒற்றைப் புள்ளியை நோக்கிய பயணம்
      புனைபெயரில் எழுதப்பட்ட தன்வரலாறு
      காவிய நேர்த்தி கொண்ட தன்வரலாறு
    • வாக்குமூலம்
      வேதனையின் அழியாத சுவடுகள்
    • கு. அழகிரிசாமி 100 நேர்காணல்
      “பாரதிக்குப் பின் பாடாத கவியே நல்ல கவி!”
    • கவிதைகள்
      கவிதைகள் மே 2009 - மே 2023
    • தலையங்கம்
      சாதிக்கொரு நீதி: சமூக நீதி அரசியலின் நிஜ முகம்
    • கவிதை
      தன்வயப்படுத்தும் கிழமை
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வணக்கம்,

காலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:

  1. முதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.
  2. காலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
  3. இப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.
  4. அடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.
  5. இங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.

இனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்!

குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு மே 2023 மதிப்புரை புனைபெயரில் எழுதப்பட்ட தன்வரலாறு

புனைபெயரில் எழுதப்பட்ட தன்வரலாறு

மதிப்புரை
சு. இராமசுப்பிரமணியன்

ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்
(தன்வரலாறு)
ஹாரியட் ஜேகப்ஸ்
தமிழில்: கமலா கிருஷ்ணமூர்த்தி
அ. சங்கரசுப்பிரமணியன்
மு. சுதந்திரமுத்து

வெளியீடு: 
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. சாலை.
நாகர்கோவில்-1
பக். 312    ரூ. 395

ஹேரியட் ஆன் ஜேகப்ஸ் (Harriot Ann Jacobs) என்னும் ஆப்பிரிக்க- அமெரிக்கப் பெண்மணியால் 150 ஆண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்ட  நூல், ‘ ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள்’. அமெரிக்க ஐக்கிய குடியரசின் தென்-மாநிலம் ஒன்றில் அடிமைக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, பாலியல் துன்பத்திற்கு ஆளாகி, தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து, வடமாநிலத்திற்குத் தப்பிச்சென்று விடுதலைபெற்ற ஓர் அடிமைப் பெண்ணின் தன்வரலாறு; என்றாலும், மற்றவர்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் இழுக்கு அல்லது உறுத்தல் ஏற்பட்டுவிடக் கூடாது என்னும் நல்லெண்ணத்தில், உண்மைப் பெயர்களை மறைத்து, மாற்றி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. தனது பெயரையும்கூட லிண்டா ப்ரெண்ட் என்னும் புனைபெயராலேயே குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவில் இருபத்தேழு ஆண்டுகள் அடிமையாகவும், ஏழாண்டுகள் தலைமறைவாகவும் வாழ்ந்து, வடமாநிலத்திற்குச் சென்ற பிறகும்கூட தங்களது இருப்பிற்காகவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டிய சூழலில் முறையான கல்விபெறாத நிலையிலும், பணிக்கு இடையே அவ்வப்போது கிடைக்கும் ஓய்வில் இந்நூல் எழுதிமுடிக்கப்பட்டதாக ஹேரியட் ஜேகப்ஸ் பதிவுசெய்கிறார்.

இந்த அடிமைச் சிறுமியின் அவலங்களைப் புரிந்துகொள்ளவேண்டுமானால், ‘முக்கோண வணிகம்’ பற்றி அறிந்துகொள்வது அவசியம். 18ஆம் நூற்றாண்டில், மாந்தவியலாளர்களாலும் தத்துவவாதிகளாலும் தோலின் நிறம், வாழிடம் போன்று பாரம்பரிய உடற்கூறுகளையும் வாழிடங்களையும் வைத்து மக்களை வகைப்படுத்தும் கருத்தியல் உருவாக்கப்பட்டது. இது, மனிதர்களில் பல தனித்தனி இனங்கள் இருப்பதையும், அவற்றிற்கிடையேயான வேறுபாட்டிற்கு உடற்கூறுகளே அடிப்படையானதாக இருப்பதையும் கூறியது.

இப்படிப்பட்ட ‘இனம்’ பற்றிய தவறான புரிதல்கள், மனிதர்களிடையே ஏற்றதாழ்வுகள் ஏற்படவும் காரணமாயின. உலக அளவில், மனிதர்களிடையேயான சமநிலையை அது குலைத்துப்போட்டது. அதனால் பெரிதும் பயனடைந்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்களது வெள்ளைத்தோல் காரணமாக அவர்கள் உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்டது. ஆப்பிரிக்காவின் நீக்ரோக்களை அடிமைப்படுத்தவும் வழி செய்தது.

 Triangular Slave Trade முதலாவதாக, ஐரோப்பாவிலிருந்து பொருட்களை ஆப்பிரிக்காவிற்குக் கொண்டுசென்று, அவற்றிற்கு ஈடாகக் கருப்பின அடிமைகளை வாங்குவதாகும்’. வாங்கிய அடிமைகளை அமெரிக்காவிற்கு அனுப்பி விற்றுப் பொருளீட்டுவது/ அவ்வாறு ஈட்டிய பொருட்களை அமெரிக்காவிலிருந்து, மீண்டும் ஐரோப்பாவிற்குக் கொண்டுவருவது.

தென்மாநிலங்களில்தான் அடிமை வணிகமும் சட்டப்படி அடிமைகளை ஆடுமாடுகள் போல் வைத்துக்கொள்வதும் நிகழ்ந்திருக்கின்றன. அடிமைச்சிறுமியான லிண்டாவின் அவல வாழ்வும் நிகழ்ந்திருக்கிறது. மாத்திரமல்ல, லிண்டா ஏன் வட பகுதிக்குத் தப்பிச்சென்றார் என்பதற்கான பதிலும் அதில் மறைந்திருக்கிறது.

கருப்பின அடிமைகள் பண்ணைகளில் பராமரிக்கப்பட்ட விலங்குகளைவிடவும் மிகக்கேவலமாக நடத்தப்பட்டார்கள்; அடிமை வணிகம் என்னும் பெயரில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த அப்பா, அம்மா, குழந்தைகள் பல்வேறு திசைகளில் பிரிக்கப்பட்டார்கள்; பட்டினி போடப்பட்டார்கள்; சிறுசிறு தவறுகளுக்குக்கூட சவுக்கடிபோன்ற கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன. மேலே எரியும் நெருப்பில் உருகும் பன்றிக் கொழுப்பு சொட்டுச் சொட்டாக அடிமையின் உடலின்மீது விழும் கொடூரமான தண்டனை பற்றிய பதிவை வாசிக்கும்போது நம் உடல் சில்லிடுகிறது.

அதிக வேலை, குறைவான உணவு , எவ்வித உரிமையும் இல்லாத அடிமைத்தனம், விற்பனைப்பண்டமாய் இருப்பது அனைத்து அடிமைகளுக்கும் பொதுவானவை இவை; சிறுமிகளுக்கு அது கூடுதல் துன்பங்களையும் வலி களையும் தந்திருக்கிறது. வயதுக்கு வரும் பருவத்தில், தம் முதலாளிகளால் அச்சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றனர். முதலாளிக்கும் அடிமைச் சிறுமிக்கும் இருக்கும் பாலியல் உறவு வெளியே தெரியவரும்போது, அந்தச் சிறுமிகளின் துன்பம் இரட்டிப்பாகிறது. காரணம், முதலாளியின் மனைவியும் அச்சிறுமிமீது பொறாமையும் வெறுப்பும்கொள்கிறாள். மாத்திரமல்ல, அடிமைப் பணிப்பெண்கள் தங்களது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்திக்கொண்டு, முதலாளியின் குழந்தைகளுக்குப் பாலூட்டவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சில முதலாளிகளின் மனைவிமார்கள், அடிமை ஆண்களுடன் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெறுவதும் நிகழ்ந்திருக்கிறது. அப்படிப் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் அல்லது தொலைதூரங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அதேவேளையில், முதலாளியாக இருக்கும் ஆணுக்கும் கருப்பின அடிமைப்பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பண்ணையிலேயே அடிமைகளாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அடிமையாக இருந்தாலும், அடிமையின் உடைமையாளராக இருந்தாலும், எந்த நிலையிலும் பெண் ஓர் அடிமைதான்.

லிண்டாவிற்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுத்த முதலாளி அம்மா, லிண்டாவைத் தனது தங்கையின் ஐந்து வயது மகளுக்கு அடிமையாகுமாறு உயில் எழுதிவைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அந்தக் குழந்தையின் தந்தையான டாக்டர் ஃப்ளிண்ட், அடிமைச்சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கும் உளவியல் சிக்கலுக்கும் உடல்ரீதியான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியிருக்கிறார். அதனை எதிர்கொண்டு, ஒரு சிறுமியாகவும் ஓர் இளம்பெண்ணாகவும் கடுமையாகப் போராடி வெற்றியும் பெற்றதுதான் இந்நூலின் மையச்சரடாக உள்ளது.

“அடிமைப் பெண்களைக் காப்பாற்றுவதற்கு சட்டத்தின் துணையை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இச்சட்டங்களெல்லாம் ஆண் உருக்கொண்ட பிசாசுகளால் உருவாக்கப்பட்டவை” என்று லிண்டா சொல்வது முற்றிலும் ஏற்கக்கூடியதே.  “என் குழந்தைகள் அமெரிக்காவில் அடிமைகளாக வளர்க்கப்படுவதைவிட அயர்லாந்தில் அரைப் பட்டினியுடன் ஏதிலிகளாக வாழ்வதையே விரும்புவேன்” என்று லிண்டா குறிப்பிடுவதற்குப் பின்னால், அவர் அனுபவித்த வலி வெளிப்படுகிறது.

ஆகஸ்ட் 1831இல் நேட் டர்னர் (Nat Turner) என்னும் கருப்பினத்தவரின் தலைமையில், வெர்ஜீனியாவின் சௌத் ஹேமிங்க்டன் பகுதியில் வெள்ளையர்களுக்கு எதிராக ஒரு கலகம் நடைபெறுகிறது. அதில் 55 முதல் 65 வரையிலான வெள்ளையர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான கலகம் என்று அது பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கலகத்திற்குப் பிறகு, அச்சம்கொண்ட வெள்ளையர்கள், கருப்பின அடிமைகளுக்குப் போதுமான மதபோதனை வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். லிண்டாவும் அந்த மதபோதனை வகுப்பிற்குச் செல்கிறார்.

அடிமைகள் ஒவ்வொருவரும் படிப்பதற்காக விவிலியத்திலிருந்து ஒரு பகுதி அச்சிடப்பட்டு அடிமைகளுக்கு வாசிக்கக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “வேலைக்காரர்களே நீங்கள் சரீரத்தின்படி உங்கள் எஜமானர்களாய் இருக்கிறவர்களுக்குப் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடமற்ற மனத்தோடும் கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிதல் போல் கீழ்ப்படியுங்கள்” என்பதாக அது இருந்திருக்கிறது. கிறிஸ்துவின் பெயரால் தேவாலயங்களும் அடிமை முறையைக் கட்டிக் காப்பாற்றின என்று குற்றம்சாட்டுகிறார்  லிண்டா.

தனது முதலாளி டாக்டர் ஃப்ளிண்டிடம் தோற்றுவிடக்கூடாது என்று உறுதியாக இருந்த லிண்டா, தன்மீது அன்பும் பரிவும் கொண்டிருந்த சாண்ட்ஸ் (சாமுவேல் ட்ரெட்வெல் சாயர்) என்னும் வெள்ளையனுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து பெஞ்சமின் என்னும் மகனையும், எல்லென் என்னும் மகளையும் பெற்றெடுக்கிறாள்.

தனது மகனோடும் மகளோடும்  அடிமைத்தளை யிலிருந்து விடுதலை பெற்றாலும் விடுதலையைத் தனது பிறப்புரிமை என்று கருதி உயிரைப் பணயம் வைத்துப் போராடிய லிண்டாவுக்கு அது உவப்பானதாக இருக்கவில்லை. தன்னை மட்டுமல்லாது, தனக்குப் பிறந்த குழந்தைகளையும் அடிமைத்தளையிலிருந்து விடுவித்துவிடவேண்டும் என்கிற ஒரு தாயின் உந்துதலையும் அந்தப் போராட்டத்தின் ஊடாக நாம் காணமுடிகிறது.

இந்நூல் தனிப்பட்ட ஓர் அடிமைச் சிறுமியின், ஒரு பெண்ணின், ஒரு தாயின் வாழ்க்கைப் போராட்டமாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும், அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளைப் பட்டியலிட்டுச் செல்லும்போது, நம் குருதி உறைந்துவிடுகிறது.

ஹேரியட் ஜேகப்ஸ் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் இந்நூலை கமலா கிருஷ்ணமூர்த்தி, அ. சங்கர சுப்பிரமணியன், மு.சுதந்திரமுத்து ஆகியோர் இணைந்து மொழியாக்கம் செய்திருந்தாலும், ஒருவர் மட்டுமே எழுதியதுபோன்ற உணர்வை வாசிப்பு ஏற்படுத்துவது மொழியாக்கத்தின் சிறப்பு எனலாம். ஒரு புனைவிற்குண்டான விறுவிறுப்புடன் நூல் நம்மை இழுத்துச்செல்கிறது. மொழியாக்கம் செய்த பேராசிரியர்களுக்குப் பாராட்டுக்கள்.

150 ஆண்டுகளுக்கு முன்பு எங்கோ அமெரிக்காவில் நிறத்தின் பெயரால் நிகழ்ந்த ஓர் அடிமைச் சிறுமியின் வாழ்வியல் துன்பங்களை இன்று நாம் அறிந்துகொள்வதால் என்ன நிகழ்ந்துவிடப்போகிறது என்றுகூடச் சிலர் கேட்கக்கூடும். ஆனால் இன்றும் இந்தப் பூமிப்பந்தின் நிலப்பரப்பெங்கும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், பாலின வேறுபாடு, வர்க்க வேறுபாடு போன்ற மேல் X கீழ் பாகுபாடுகளால் சிறுபான்மையின மக்கள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கு இந்த அடிமைச் சிறுமியின் வாழ்க்கை நிகழ்வுகள் பயனுள்ளவையாக இருக்கும்.

                மின்னஞ்சல்: srs thovalai@gmail.com

 

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.