கண்ணழிந்து பெற்ற உரிமை
முதல் மூன்று சத்தியாகிரகிகளுடன் ராமன் இளையாத்தும் (நான்காமவர்) ஆமைச்சாடி தேவனும் (ஐந்தாமவர்).
வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டு தொடக்கவிழாவன்று வைக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சிற்பங்கள்.
“கண் இரண்டையும் விட்டுட்டு, உடம்புத் தோலை உரிச்சு, உப்புக் கண்டம் போடுங்கய்யா. அப்பத்தான் இவன் உருப்படுவான். நான் ஒன்னும் கேட்க மாட்டேன்.” இது 1960களில் பள்ளிக்கூடங்களுக்குப் பையன்களை இழுத்துக்கொண்டு போய் விட்டுவிட்டு வரும் பெற்றோர் வாத்திமார்களிடம் விடுக்கும் கோரிக்கைகளுள் ஒன்று. உடம்புத் தோலை உரிப்பதற்குக் கூட அனுமதி வழங்கும் பெற்றோர் கண் இரண்டை மட்டும் விட்டுவிடுங்கள் என்று அந்தச் சந்தர்ப்பத்திலும் கண்ணை மறக்காமல் காப்பாற்றுவ