தொன்மொழிக்குள் தன்னைத் தொலைத்தவர்
‘தமிழ் மொழி செம்மொழிக்கு உரிய அனைத்துத் தகுதிகளையும் உடையது; தமிழ் இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்கள் என நிறுவ நான் இவ்வாறு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கே வியப்பளிப்பதாக இருக்கிறது’ எனத் இந்திய அரசால் தமிழ்மொழி ‘செம்மொழி’ யாக அறிவிக்கப்படப் பரிந்துரைக் கடிதம் எழுதியவர் அமெரிக்கத் தமிழறிஞர் ஜார்ஜ் எல். ஹார்ட். இக்கடிதத்தின் வாயிலாக இவர் தமிழ்க் கல்விப்புலச் சூழலில் பரவலாக அறியப்பட்டிருந்தாலும் தமிழ்மொழிக்கு இவர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் தமிழ்நாட்டில் போதிய கவனம் பெறவில்லை என்றே குறிப்பிடலாம்.
ஜார்ஜ் எல். ஹார்ட் 1942 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் நாளன்று பிறந்துள்ளார். இவரது தந்தை தொடக்கத்தில் வழக்குரைஞராக இருந்து பின்னர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நீதிபதியாக (Federal Judge) பதவியுயர்வு பெறுகிறார். இதன் காரணமாக ஹார்ட் வாஷிங்டனில் வளர்கிறார். தனது பள்ளிப் பருவத