மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2023
தனித்துவமிக்க படைப்பாளி மா. அரங்கநாதனின் நினைவை ஒட்டி 2018 முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் 16ஆம் தேதியன்று மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள் முன்றில் இலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படுகின்றன. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறையில் பல்லாண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவர்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு, செயற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுடன் தலா ஒரு லட்சம் கொண்ட ரொக்கப் பரிசும் சேர்த்து வழங்கப்படுகிறது. திறனாய்வாளர், பேராசிரியர் க. பஞ்சாங்கம் மற்றும் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் இருவரும் 2023ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். விருதுபெற்ற இருவருக்கும் காலச்சுவடின் வாழ்த்துக்கள்.