கருமேனியாற்றங்கரையில் ஒரு காண்டாமிருகம்
(படம் -1)
அஸ்ஸாமிலும் வங்காளத்திலும் அண்டை நாடான நேபாளத்திலும் இன்றும் வாழும் காண்டாமிருகம், தொன்றுதொட்டு இந்தியாவில் இருந்தது. மத்திய பிரதேசத்திலுள்ள பிம்பெட்காவில் உள்ள பாறை ஓவியங்கள் பலவற்றில் இவ்விலங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. அதை ஆதிமனிதர் வேட்டையாடுவது போன்ற காட்சிகளும் உள்ளன. உத்திரப்பிரதேசத்தில் 2800 ஆண்டுகளுக்கும் முற்பட்ட குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் இவ்விலங்கின் உடலைக்கூறு போட்டு, அதன் எலும்புகளை உடைத்து, அவற்றைக் கூர்மையாக்கி ஆயுதங்களாகப் பாவித்தனர் என்று தெரிகின்றது. சிந்துச் சமவெளியில் பரவலாகத் திரிந்த காண்டாமிருகங்களின் உருவங்கள் அங்கு கண்டறியப்பட்ட பல முத்திரைகளில் காணப்படுகின்றன. (படம் 1)அகழ்வாய்வில் கிடைத்த களிமண் முத்திரைகள் பல இவ்விலங்கைச் சித்திரிக்கின்றன.
தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கும் முன், புதி