வேதனையின் அழியாத சுவடுகள்
Courtesy: Jogen Chowdhury
கடந்த ஏப்ரல் மாத காலச்சுவடு இதழில் (280) தூய நெஞ்சக் கல்லூரி, திருப்பத்தூரில் தமிழ்த் துறையில் பணியாற்றும் கி. பார்த்திபராஜா இழைத்த பாலியல் வன்முறை பற்றிய வாக்குமூலம் படித்தேன். அதற்கு பார்த்திபராஜா அளித்த பதிலும் என்னை வந்தடைந்தது, வந்தடைந்த விதம் அவர் இழைக்கும் மிரட்டல் குற்றம். அதில் அவர் பாதிக்கப்பட்டு மீண்டு வாழ்வோர் பெயர் கூறாமல், குற்றம் சாட்டப்பட்டோர் பெயர் கூறுவது பற்றி எழுப்பியுள்ள விமர்சனத்திற்கு காலச்சுவடு இதழின் திடமான பதிலை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறேன். அவர் குறிப்பிட்டுள்ள மற்ற அமைப்பான த.மு.எ.க. சங்கமும் அவரது பொய்களுக்கான திடமான பதிலை, இப்பொழுதாவது பொதுவில் அளித்து, பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பர் என்று நம்புகிறேன்.
இதே நபரால் எனக்கும் பாலியல் வன்முறை இழைக்கப்பட்டது.