நான் வட்டார எழுத்தாளன் அல்ல
கொங்கு வட்டாரக் காவடிக்காரர்கள், திருவேலைக்காரர்கள், உருவாரம் செய்பவர்கள், இரவாடி வித்தைக்காரர்கள், தேர் தச்சர்கள், பாம்பு பாடம் போடுபவர்கள் ஆகியோரின் வாழ்வைத் தன்னுடைய மொழியால் கதையாக்கியவர் என். ஸ்ரீராம். தாராபுரத்திற்கு அருகிலிருக்கும் நல்லிமடத்தில் பிறந்தவர். தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். மனைவி ராதா, மகன் அபிஷேக்குமார் ஆகியோருடன் தற்போது சென்னையில் வசிக்கிறார். இதுவரை இரண்டு நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘சுஜாதா விருது’ (2014), ‘புதுமைப்பித்தன் விருது’ (2017), ‘தஞ்சை ப்ரகாஷ்’ (2023) இலக்கிய விருது ஆகியவற்றைச் சிறுகதைகளுக்காகப் பெற்றிருக்கிறார்.
நீங்கள் கதை எழுதும் முறை, தொடர்ந்து வாசிக்கும் நூல்கள் குறித்துச் சொல்லுங்கள்.