இந்தப் பொழுதின் இரு கோப்பைகள்
இந்தப் பொழுதின் இரு கோப்பைகள்
சிடார் இலைகள் கசிந்த தேநீரில்
கொதிக்கும் பால் சேர்த்து
நீல டியூலிப்பிகள் படரும் கோப்பையில் ஊற்றி
மூக்கு நுனியில்ஆவியின் வெப்பத்தை
உணர்கையில் உனது மின்னஞ்சலைப் பார்த்தேன்
மாலை மழை வெயிலைக்
கைப்பற்றிக் கடத்தியிருந்தாய்
உனது மற்ற கையில் என்ன கோப்பையென்று
கேட்கவில்லை நான்
உனது சொற்களை அழித்துவிட்டது
உன் உடல் மீதான வன்முறைகள் என்கிறாய்
நினைவில் உனது தாய்மொழி விரிகையில்
மூளைத் திரவம் கொதித்து
உடல் உதறி
உன்னிடமிருந்து தெறித்து விழுகிறது என்கிறாய்
நீ பேசும் மொழி புரிந்தும் புரியாமலும் இருந்தது
வாழ்வின் வட்டுருவுக்குள்
அம்மாக்களின்
அம்மாவாக ஆக்கப்பட்டவர்களின