வெற்றி
ஓவியம்: ரோஹிணி மணி
வெற்றி
பட்டாம்பூச்சியைப் பறக்கச் செய்யும் ப்ராஜெக்ட்டில் இருந்தேன்
முதல் முறை உயிரூட்டிய போதே அதன் விழிகள் அசைந்தன
பின்னர் சின்னஞ்சிறு கால்களை ஆட்டிக் காட்டியது
இறக்கை படபடத்து உயிர்ப்பைத் தெரிவித்தது
ஆனால் என்ன செய்தாலும் பறக்கவில்லை
ஒவ்வொரு முறை அதை உயிர்ப்பித்த போதும்
தவிப்போடு படபடத்தது அதன் மென்பொருள்
வாயில்லா ஜீவன் பாவம்
பறக்கத் தடுப்பது எது என்று சொல்லத் தெரியவில்லை
என் மூளையை செல் செல்லாகப் பிரித்தெடுத்த
அதன் இயக்கத்தை ஆய்ந்தபோது
இறக்கைகளைக் கொஞ்சம் வெட்டினால் ...
தீர்வைக் கண்டுகொண்டேன்
பட்டாம் பூச்சி பற