மண்டைக்காடு கோயிலுக்கு
ஓவியம்: ரோஹிணி மணி
மண்டைக்காடு கோயிலுக்கு
கடல் அலைகளின் கூட்டம் வந்து வந்து செல்கிறது
பிரசாதத்தை மீனுக்குத் தீனி போடுகிறார்கள்
கடல் தேவதையாய் ஜொலிக்கிறாள்
மண்டைக்காட்டு அம்மன்
அவள் கோயில்
கார்ட்டூனில் வரும் தங்கத்தீவு
கோவிலில் மீன்களின் வலசை போதல்
அதில் நானும் ஒரு மீன்தான்
நானும் மாடர்ன் பெண்ணாக இருக்கத்தான் ஆசைப்படுகிறேன்
ஆனால் என்ன செய்வது
ஆங்கிலம் வரவில்லை
நவீன முகப் பூச்சுகளிலும் நாட்டமில்லை
வகுப்புக்கு வெளியே தோழிகள் அவர்களின் தோழர்களுடன்
மொபைலில் பேசிக்கொள்கிறார்கள்
என் மொபைலைத் திறந்து
அப்பாவுடன் மெதுவாகப் பேசிக்கொண்டேன்
தோழிகள்
ஐபிஎல் மழையில் ஆடிக்கொண்டு