அவள் காதுகளுக்குள்
ஓவியம்: ரோஹிணி மணி
அவள் காதுகளுக்குள்
கடிகார டிக் டிக் ஓசை கேட்கிறது
நானொரு உயிருள்ள வெடிகுண்டு
எனச் சோகமாய்ப் புன்னகைத்தாள்.
நாம் அனைவரும்தான் என்றேன்.
காதோடு காது வைத்தால்
நாமும் அவ்வொலி கேட்கலாம்.
Pulsatile tinnitus.
அவள் உறங்கி விழித்தால்
கடிகாரமும் விழித்தது
அவள் நம்முடன் பேசும்போது
கடிகாரம் அவளோடு பேசியது
காய்ச்சல் முற்றினால் மட்டும்
தனக்குள் இரு ராட்சசக் கடிகாரங்கள்
மோதிக்கொள்வதாய் உளறுவாள்.
காதலன் அவள் அந்தரங்கம் நுழையும்போதெல்லாம்
கடிகார முட்கள் தட்டுப்படுகின்றனவா
எனக்கேட்டு வெடித்துச் சிரித்தாள்.
மருத்துவமனைகளிலும் ஜைன கோயில்களிலும்
மணிக்கணக்கில் காத்திருந