தேர்தல் புறக்கணிப்பு: ‘சிறியதே’ பெரியது
முன்பெல்லாம் தேர்தல் அறிவிப்புடனே தேர்தல் புறக்கணிப்புப் பற்றிய செய்திகளையும் அதிகமாகப் பார்த்துவிட முடியும். இயந்திரங்கள் உதவியால் தேர்தல் முறை ‘நவீனமாகி’விட்டாலும் தேர்தல் புறக்கணிப்புகள் பல இடங்களிலும் தொடர்கின்றன. புறக்கணிப்பதற்குத் தற்போது புதிய காரணங்களும் சேர்ந்திருக்கின்றன என்பதை இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பார்க்க முடிந்தது. பிரச்சினைகளைப் பேசாமலேயே பார்த்துக்கொள்வது ஒருவகையென்றால், பேசிப் பிரபலமாகிவிட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து பேச அனுமதித்து அதனை ‘இயல்பாக்கி’ நீர்த்துப் போகவைப்பது மற்றுமொரு வகை.
எப்போதும் தாம் நாடிச்செல்லும் அரசியல்வாதிகள், தங்களை நாடி வருகிற தருணத்தின்போது தங்கள் பிரச்சினைகளின்பால் கவனத்தை ஈர்க்க வெகுமக்கள் செய்யும் ஒரு தற்காலிக ‘மிரட்டல்’தான் இத்தகைய புறக்கணிப்புகள். எளிய மக்கள் அதிகார வர்க்கத்தைத் தங்கள் பிரச்சினைகள் நோக்கித் திருப்ப இதுவரை இரண்டு வழிமுறைகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள்.
ஒன்று, தேர்தல் புறக்கணிப்பு; இரண்டு, மதம் மாறுவது. இவ்விரண்டுமே