பெருங்கூத்தன் தாசீசியஸ்
ஏ.சீ. தாசீசியஸூக்கு அப்போது பத்து வயது. இளவாலை புனித ஹென்றி விடுதிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தார். அங்கு பள்ளிவிழாவொன்றில் தயாரிக்கப்பட்ட ‘குசேலர்’ நாடகத்தில் குசேலரின் மூத்த மகன் வேடம் அவருக்குத் தரப்பட்டிருந்தது. குசேலரின் மனைவி யாசித்துப் பெற்ற உணவைப் பகிர்ந்துகொள்வதில் அவளது பிள்ளைகளிடையே போராட்டம். மூத்த மகன் ஒரு கவளம் உணவைத் தனது முன்னுரிமையெனப் பறித்துக்கொள்கிறான். பறித்த உணவை அவசரகதியில் உண்ணத் தொடங்குகிறான். அப்போது ஒரு சோற்றுப் பருக்கை அம்மாவின் சேலைத் தலைப்பில் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அதையும் பொறுக்கி வாயில் வைக்கிறான்.
அது தற்செயலாக நடந்த ஒன்று. ஆசிரியர் சொல்லிக்கொடுத்த சேஷ்டை அல்ல அது. சிறுவனாக தாசீசியஸ் தனது பாத்திரத்தை உள்வாங்கி அவ்வாறு சமயோசிதமாகச் செய்தார். ஏற்கெனவே ஏழு வயதில் பாரதியார் வேடமிட்டுப் பள்ளி நாடகமொன்றில் நடித்ததற்காகப் பாராட்டும் விர