மரம் உதிர்த்த ஒற்றை இலையில்
ஓவியம்: ரோஹிணி மணி
மரம் உதிர்த்த ஒற்றை இலையில்
பெரும் பனிக்காலம்
நீண்டு நிமிர்ந்து வளைந்து
பின்னிக்கொள்ளும் கொடிகளுடன்
முடிவில்லா உரையாடல்
நீலம் பூத்துக்கிடக்கும் பகல்பொழுதுகள்
எப்போதும் எப்போதும்
அனர்த்தமில்லாஅந்திகளைக் கையளிக்கும்
சிறுபின்னடைவுகளும் பெரும் நம்பிக்கைகளும்
வீண்போகா வார்த்தைகளுமாக
நாம் நீ நான் என
இரவுக்கு முன் மீண்டது பகல்
நீச்சப் பொழுதுகளின் தியானம் என்ன
யாதுமாகி நின்று இறைஞ்சும் பொழுதுகளில்
பேறாய்ப் பெற்றுநிற்கும்
ஒற்றைப்பதிலால் என்ன நேர்ந்துவிடும்?
ஸ்பரிசங்கள் பெரும்பாவமெனில்
பெருந்தண்டனைதான் என்ன?
உப்புக்கற்கள் பழுதுபார்த்த முட்டிகளைத்
தேய்த்து மாயும் காட்சிகள