டச்சு யாழ்ப்பாண வைபவமாலை
கிறிஸ்தவத் திருமறையை முதலில் தமிழ்ப்படுத்தியவர் யார் என்று கேட்டால் இந்தியக் கிறிஸ்துவர்கள் சுய பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் வழமையான பதில் டேனிஷ்காரரான சீகன் பால்க் என்பதாகும். ஆனால் இந்த 1715 திருப்புதல்களுக்கு முன்பே இன்னுமொரு பிரதி இருக்கிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் டச்சுக்காரரான பிலிப்பஸ் பல்டேயஸ். முழுத் திருமறையையும் இவர் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். இவர் முதலாம் நற்செய்தியான மத்தேயுவை மட்டும்தான் தமிழ்ப் படுத்தினார். இது மொழிபெயர்க்கப்பட்ட திகதியை உறுதியாகத் குறிப்பிட முடியாவிட்டாலும் 1665இல் இவ்வேலை நடந்திருக்கலாம். இந்த மொழிபெயர்ப்பு வேலை நடந்தது தரங்கம்பாடியில் அல்ல; யாழ்ப்பாணத்தில். எல்லோருமே வெளிநாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள், ஒரு தமிழர்கூடத் திருமறைத் திருப்புதலில் ஈடுபட வில்லையா என்று அவதிப்படுகிறவர்களுக்கு விடை இருக்கிறது; அது நீங்கள் வழமையாக நினைப்பதுபோல் நாவ