சார்லஸ் ராஜாவின் படைவீரர்கள்
ஓவியம்: ரோஹிணி மணி
சார்லஸ் ராஜாவின் படைவீரர்கள்
புசு புசு சிவப்புத் தொப்பியுடன் அசையாமல் நிற்கும்
பக்கிங்ஹாம் அரண்மனை இரும்புக் கம்பிக் கதவில்,
குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தில்
இருப்பவர்களின் கண்களில் தெரியும்
வெடிமருந்து நிரப்பிய குழாய்த் துப்பாக்கிகளும் வீர சாகசங்களும்
அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் மலர்ந்த எக்சோரா பூக்களாய்.
இங்கிலாந்தில் மெல்லிய வெயிலுடன்
கதகதப்பான குளிர் எப்போதும்
இருந்துகொண்டிருக்கிறது
செம்மறி ஆடுகள் யாருடையவை
என்று தெரியவில்லை
எல்லைக் கோடில்லாத புல்வெளியை
அவை தேவைக்கு அதிகமாய் மேய்கின்றன
மஞ்சள் இலைகளுக்கு நடுவே
சில பச்சை இலைகள்
நரை