எதிரி
ஓவியங்கள்: செல்வம்
தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தேன். உடலை லேசாக உதறிக்கொண்டவன் கை கால்களை அனிச்சையாக நீட்டி நெளித்தேன். படுத்தவாறு கண்களைத் திறக்க முயன்றேன். உறக்கக் கலக்கத்தில் கண்கள் திறக்க மறுத்தன. அப்படியே படுத்துக்கிடந்தேன். எங்கே இருக்கிறேன் என குழப்பம் வந்தது. நினைவு கூடி மனம் நிதானத்தை மீட்கத் தொடங்கியது. அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை அறைக்குள் பகல் கொண்டுவந்திருந்தது. நேரம் என்னவாக இருக்கும் என யூகிக்க முயன்றேன். பத்துமணிக்கு மேல் இருக்குமா? கைக்கடிகாரம் அகப்படவில்லை. இருக்கும் இடம் எதுவெனத் துழாவினேன். கொஞ்ச நேரம் ஒன்றும் புரிபடவில்லை. துறை விடுதியாக இருக்கலாம் என்று தோன்றியது. அலுவலக நாளாக இருக்குமோ என்ற குற்றஉணர்வும் ஆட்கொண்டது; இருக்காது, இன்று ஞாயிறு என்றது மனம். உறக்கம் இனி வரப்போவதில்லை என்று தோன்ற, உட்