ஒரு கால் அந்தரத்தில் தொங்க
ஓவியம்: ரோஹிணி மணி
ஒரு கால் அந்தரத்தில் தொங்க
ஒற்றைக்காலை ஊன்றி நடக்கிறார் அவர்
தொங்கும் காலில் ஆறு விரல்கள்
எதிர்க்கோயிலில் மாகாளி சிரித்தபடி அமர்ந்திருக்கிறாள்
சுடரும் ஒளி படபடக்கிறது எண்ணெய்யின்றிக்
கடக்குமிடத்தில் ஒரு மருத்துவமனையில் செவிலியர்
தேவையென்றொரு பலகை
தன்னைக் கடக்கும் ஒவ்வொருவரையும் தான் கடக்கும்
ஒவ்வொன்றையும் அந்தரத்தில் அலைந்தபடியே நகைக்கிறது ஆறாம்
விரல்.
இவ்வளவு சுலபமாய் வாழ்விலிருந்து ஒருவரை உதிர்த்துவிட
முடியுமென அறிந்திருந்தால்
இன்னும் விரைவாய் அது நிகழ்ந்திருக்கும்தானே...
மரத்திலிருந்து மலர் உதிர்வதுபோல
வானிலிருந்து தாரகை வீழ்வதுபோல
பத்து நாள் பாராமுகமே
ஒருவரை வாழ்விலிருந்து