மணிக்கொடியின் சினிமா முகங்கள்
பி. எஸ். ராமையா எழுதிய ‘மணிக்கொடி காலம்’ நூலை அண்மையில் படிக்க வாய்த்தது. மேலும், மணிக்கொடி இதழ்களைச் சுமாராக 40 எண்ணிக்கையில் (1936-1939) மேலோட்டமாகப் பார்க்க முடிந்தது.
மணிக்கொடி இதழின் வரலாற்றினை ஆய்வாளர்கள் சிலர் போன்றவர்கள் முன்பே எழுதிவிட்டனர். தீவிர இலக்கிய இதழாக மட்டுமே தற்காலத்தில் அறியப்பட்டு வரும் மணிக்கொடி சினிமா முகத்தைக் காட்டுவதாக ‘மணிக்கொடி சினிமா’ என்ற சிறு நூலை கடற்கரய் வெளியிட்டார். அதில் வெளியான சில திரைப்பட விமர்சனங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பதிப்பித்ததுடன் சினிமா குறிப்புகளை உள்ளடக்கிய ஒரு நீண்ட கட்டுரையும் எழுதியுள்ளார். மணிக்கொடி இதழ் தொகுப்பாகவும் வெளிவந்துள்ளது. எனினும், சினிமா சார்ந்த பக்கங்கள் தொகுக்கப்படவில்லை.
1935ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவிற்கென்று சினிமா உலகம் இதழ் தோன்றியது. அதற்கும் முன்பிருந்த இதழ்கள் சினிமாவைக் கண்டுகொள்ளவில்லை. வெகுமக்கள் ஆதரித்த நாளேடுகள், பல்சுவை வணிக இதழ்களில் சினிமா விளம்பரங்கள், தகவல்கள் இடம்பெற்றன. The Hindu நாளேடு, ஆனந்தவிகடன