என் நிறம் சிவப்பு
ஓவியம்: ரோஹிணி மணி
என் நிறம் சிவப்பு
தோல் போர்த்திய சிவப்புத் தண்டுகள்
என் சாயலை மாற்றிக்கொண்டிருக்கிறது
நரம்புகளில் வெப்பத்தின் பிரகாசத்துடன்
சிவப்பு நதி கிளை விரித்தோடுகிறது.
என் விரல்கள் சிவப்பு
என் நகங்கள் சிவப்பு
என் மார்புகள் சிவப்பு
என் நுரையீரல் மூச்சிலும்
உள்ளேயும் வெளியேயும் சிவப்பு
என் பல் ஈறுகளில் சிவப்பு
என் உதடு வெடிப்புகளில் சிவப்பு
என் நகங்கள் அதுவாக விடைபெற்றுக்கொள்கின்றன
என் தலைமயிர்கள் காலாவதியான சோளம் கூந்தலாக
காற்றலையில் இறந்து வீழ்கின்றன
கல்லறைக்குக் கூட்