பரந்த வானத்தைத்
ஓவியம்: ரோஹிணி மணி
நேசம்
பரந்த வானத்தைத்
தன் ஒற்றைச்சிறகுகளால்
அளந்து பார்க்கத் துடிக்கிறது
பறவை
மிச்சமிருக்கும்
நிலத்தையும்
இணைக்கத் துடிக்கிறது
கடல் அலை
நேசப்பித்துக்குள்
ஒருதுளி பித்து
மிகுதியாகையில்
பெரும்பித்தாக்குகிறது
நேசம்
நான் கூட
இப்படியாகத்தான்
உன்னிடத்தில்
பித்து
போதை தெளிந்தவன்
மீண்டும் மதுக்கடைக்கு முன்
நிற்பதைப்போல்
உன்னிடத்தில் நிற்கிறேன்
செக்கு மாடாய்
என்னைச் சுற்ற வைக்கிறாய்
கருவாட்டைத் தேடும்
பூனையின் நாசியைப் போல