நீ கொல்லப்படுகிற காலம்
நீ கொல்லப்படுகிற காலம்
உன்னை
நாளெல்லாம் வதைக்கிற உண்மையின்மீது
வெளிச்சம் பாய்ச்சுகிறவரை
நீ நசுக்கிப்போகிற
மற்றவர்க்காக சுவாசிக்கிறவரை
தன்னையே செதுக்கி எழுதிக்கொள்கிற
அவர்கள் நோக்கி
நீதியின் பெயரால்அநீதியை
கடவுளர்களின் பெயரால் கலவரத்தை
பொய்க்கதைகளை
கொடுங்கோன்மையை
துப்பாக்கியை
பராக்கிரமத்தின் பெயரால் பிரயோகிக்கிறாய்
உண்மையில்
உன் உயிர் அச்சத்தில் நடுங்குகிறது
உன் பொய்மையில் சீழ்த்து நாறுகிறாய்
அவர் ஒளிரச் செய்கிற
நியாயத்தின்முன் பதைத்து நடுங்கி
உயிர்க்கொலையின் பெயரால்
அநீதியை எரித்துச் சாம்பலாக்கப்போகிற
உண்மையின்
சுடரைத் தூண்டுகிறாய்.
அவர்
கண்ணாடிக்கு வெளியே
மீந்திருக்கும் மலையின்
அழகிய வடிவங்களை அணைத்து
அதோடு ப