கடிதங்கள்
டிசம்பர் இதழில், ‘நிழல்கள்’ (திரைப்படக் கட்டுரைகள்) நூல்பற்றிய மதிப்புரையை லேகா எழுதியிருந்தார்.
ஒரு நூலை மதிப்பிடும்போது, அதன் ஆசிரியரின் நோக்கமென்ன வெனப் பார்ப்பது முக்கியம்; பிறகு, நோக்கம் எவ்வளவுக்கு நிறைவேறியிருக்கிற தென்றும், நிறை – குறை என்னவென்று பார்ப்பதும் சரியானது. ஆசிரியர் தனது நூலின் ‘என்னுரை’யில், “கதையின் நிகழ்வுப்போக்கையும் முக்கிய அம்சங்களையும் முக்கிய உரையாடல்களையும் வாசகனுக்கு அறிமுகப்படுத்த விரும்பினேன்; .... காட்சிச் சித்திரிப்பில் ‘திரைச்சுவடி’யில் எழுதும் முறையையும் இடைக்கிடை கையாண்டேன். திரைப்பட ஆர்வலனாக என்னில் பதிந்தவற்றை ‘மனப்பதிவின் வெளிப்பாடாக’ – படைப்பு மொழியில் வெளியிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்; இங்கு, தான் பார்த்த சில திரைப்படங்கள் பற்றிய தனது அனுபவத்தைப் பகிர்வதே அவரது நோக்கம்! ஆனால், மதிப்புரைக் கட்டுரையை எழுதிய லேகா, நூலின் கட்டுரைகளில் ‘தீவிர விமர்சனப் பார்வை’யை எதிர்பார்த்து (விமர்சனக் கட்டுரைகளாக!) ஏமாற்றத்தைத் தெரிவிக்கிறார்! ஒரு சிறுகதைத் தொகுதியில