படிமிகள் - வாராணசி (நாவல்)
வாராணசி
(நாவல்)
பா. வெங்கடேசன்
ரூ. 225
சோனு மிகச் சிறுவனாக இருந்த காலத்திலேயே லோத்தர் தன்னுடைய செயல்பாடுகளை ஒடுக்கிக்கொள்ளத் துவங்கிவிட்டிருந்தபடியால், பவித்ராவிடம் தன் பஞ்சகங்கா படித்துறை அறிமுகத்தின்போது சொல்லிக் கொண்டதைப் போல 1950களின் துவக்கத்தில் உள்ளூர்க்காரர்களுக்குப் பரிச்சயமான வெளி நாட்டவர்களில் ஒருவராக இருந்தவர்தானென்றாலும், இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டிருந்தது. சோனுவும் இதாவும் பின்பு சில முதியவர்களைச் சந்தித்துக் கேட்டபோதுகூட செயல் திறனும் ஞாபகசக்தியும் ஓய்ந்துபோன அந்த முன்னாள் இளைஞர்களின் நினைவில் கீழைத் தேயத்தின் முக்தி வழிகளில் ஈர்க்கப்பட்டு வாராணசி மண்ணிற்கு வந்து தஞ்சம் புகுந்து உள்ளூர்க்காரர்களைச் சந்தேகத்துடன் பார்த்தபடி கஞ்சா ஹுக்கா சகிதமாக அலைந்து கொண்டிருந்த கணிசமான வெளிநாட்டவர்களின் நடுவில் அஸி கட்