கபன் துணி - பணிக்கர் பேத்தி (நாவல்)
பணிக்கர் பேத்தி
(நாவல்)
ஸர்மிளா ஸெய்யித்
ரூ. 125
கடும் வெயில்கால ஆகஸ்ட் மாலைப் பொழுதில் மஃரிப் தொழுகைக்காக உழுச் செய்து கொண்டு தனது அறைக்குள் சென்று கொண்டிருந்த போது மகள் சாஜஹான் சொன்னாள்.
“வாப்பா வந்திருக்காங்க”
இப்படியொரு சேதி தனது செவிகளை விரைவில் வந்தடையும் போன்ற ஒரு முன்னுணர்வு அண்மைக்காலமாக இருந்துவந்தவளைப் போல எந்தவித ஆச்சரியத்தையும் வெறுப்பையும் காண்பித்துக் கொள்ளாது அறைக்குள் சென்றாள். தனக்கு எந்தவிதப் பொறுப்புமற்ற எந்தவகையிலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு காரணத்தின் பொருட்டு இருப்பந்தைந்து ஆண்டு கால வாழ்வையும் ஏக்கமும், ஏமாற்றமும் வெறுப்பும் சூழ்ந்ததாக மாற்றிய ஒரு மனிதர் வந்துள்ளார் என்ற செய்தி மனத்தினுள் திடீர் கலவரத்தை உண்டுபண்ணுவதை அவளால் தடுக்க முடியாதிருந்தது. ஒரு மனிதனால் இப்படியும் குற்றவுணர்வின்றி வாழ முடியுமா என அவ்வப்போது அடைந்