கழிவின் எரு நிலம் - வசைமண்
வசைமண் (உலக கிளாசிக் நாவல்)
மார்ட்டின் ஓ' கைன்
தமிழில் - ஆ. சிவகுமார்
ரூ.390
இந்தக் கல்லறைத் தோட்டத்தின் ஊதுகொம்பு நான். நான் சொல்ல வேண்டுவதை நீங்கள் கேட்க வேண்டும். என் குரலை நீங்கள் கேட்க வேண்டும்...
இங்கே கல்லறையில் நித்தியமாக ஒரு உருளை சுழன்றுகொண்டே இருக்கிறது; வெளிச்சத்தை இருட்டாக்கியும் அழகை அருவருப்பானதாக ஆக்கியும் மயக்கும் தங்கநிறக் கேசச் சுருள்கள்மீது கசடையும் கொஞ்சம் பூஞ்சாணத்தையும் சிறிது சேறையும் பாசியையும் நரையின் தூறலையும் அது அப்புகிறது. அஸ்தமிக்கும் சூரியனின் தங்கக் கம்பிகளிலிருந்து, நிலவொளியின் வெள்ளி வலையிலிருந்து, புகழின் கண்ணைப்பறிக்கும் அங்கியிலிருந்து, கையசைத்து விடைபெறும் மங்கும் நினைவிலிருந்து அலட்சியத்தின், மறதியின் மாலைநேர முகத்திரை நெய்யப்படுகிறது. நெகிழ்வான, பிசைய முடிகிற களிமண்ணே இந்த நெசவாளியின் கச்சாப்பொருள். அவனுடைய தறி ஆட்