சாலமிகுத்துப் பெயின்
சாலமிகுத்துப் பெயின்
ஏற்கனவே
புட்டம் பழுக்கப்பிரம்படி பெற்றுத்தான்
திரும்புகிறீரே
நெரிசல் பிதுங்குமிந்த பயணத்திலாவது
பொத்திக்கொண்டிருக்க ஏலாதா
வடகோடு உயர்ந்தென்ன தென்கோடு சாய்ந்தென்ன
ஊனமும் மூப்பும் ஒதுங்குமிடத்தில்
காற்றாட கண்ணுறங்கவில்லையா
வான்பிறை
இடிபாடுகளில் நசுங்கியவள் காலிடுக்கில்
மலங்க மலங்க விழிக்கும்
குட்டியூண்டை
பரிவுமேலிட மடியில் வாங்கிக்கொண்டீர்
பஞ்சுரண்டை கன்னம்தொட்டு
எங்கே செல்கிறாய் எனவும் உசாவுகிறீர்
பெரிய கதவில் சிறிய கதவு வைத்த
அப்பா வீட்டிற்கு என்கிறாள்
இப்போது பாருங்கள்
அச்சு முறிந்து
உங்கள் வண்டி படுத்தேவிட்டது.