பிரபஞ்சன் (1945 - 2018) – சுமதியும் மூர்த்தியும் இன்னும் சில மனிதர்களும்
பிரபஞ்சன் இறந்த அன்று மழை தூற ஆரம்பித்தது. அந்த மழை கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து பெய்து, அவரது இறுதிச்சடங்கு நாளான 23ஆம் தேதி அன்று வலுத்துப் பெய்தது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி வரையும் இடைவிடாது பெய்தது. அது; புதுவைக்குள் நுழையும்போது அடர்ந்து பெய்ய ஆரம்பித்தது.
பிரபஞ்சனிடம் எப்போதுமே ஓர் ஈரம் இருக்கும். அது அவரது எழுத்தில் அதிகமாகப் பிரதிபலிக்கும். அவருடைய எழுத்து காலகாலத்திற்கும் அவரது மனமாகத்தான் இருந்திருக்கிறது. அந்த மனத்தின் மணம் அவரது எழுத்தில் ஈரத்தைப் பாய்ச்சிக்கொண்டே இருந்தது. ஏதோவொரு பருவத்தில் ஏதோவொரு காட்டுச்செடி கூட இலேசாக நீரில்லாமல் இருந்திருக்கும். ஆனால் பிரபஞ்சன் தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய உலகத்தை, எழுத்தை அன்பெனும் நீரால் உயிர்ப்பித்துக் கொண்டேயிருந்தார். அதுதான் பிரபஞ்சனைப் பிரம்மமாக்குகிறது.
பிரபஞ்சனுடைய கதைகள் வெகுஜனப் பத்திரிகைகளில் வரத்