அன்பு வழி
நேற்று, அவள் ஆராதித்துக் கொண்டாடும் கவிஞரிடமிருந்து போன் கால் வந்தது. “முன்னுரையை எழுதிவிட்டேன்... வந்து வாங்கிக்கொள்ளுங்கள்...” என்று கவிஞர் போனில் சொன்னார். சுகந்தியின் மனம் சிறகடித்தது. தமிழகத்தின் தலைசிறந்த இலக்கியவாதியின் முன்னுரை அவளுக்குக் கிடைத்துவிட்டது. அன்று டெய்ஸியுடன் அவளுடைய கவிதைகளை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்குப் போனபோது கூட, முன்னுரை எழுத ஒப்புக்கொள்வாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
“அன்பையும் கருணையையுமே திரும்பத்திரும்ப தனது படைப்புகளிலும் மேடைப் பேச்சுகளிலும் வலியுறுத்தும் அவரால், முகத்தில் அடித்ததுபோல் முன்னுரை எழுத முடியாது என்று சொல்ல முடியாது...” என்று டெய்ஸிதான் நம்பிக்கையுடன் சொன்னாள். சுகந்தியின் முகத்தருகே குனிந்து டெய்ஸி இதைச் சொன்னபோது, அவள் போட்டி ருந்த லாவண்டரின் மணமும், ஜன்னலுக்கு வெளியே காற்றில் ஆடி