பாங்கு
ஓவியம்: அம்புஷ்குமார் - (நன்றி: சமகாலிக மலையாளம் - வார இதழ்)
பிரஜைகள்தம் பிழைகள் பொறுத்தருள்க என்று
புவிமூன்றின் தந்தையிடம் பொழுதுகள் பலப்போதும்
குறைவற்ற நேசத்தால் இறைஞ்சுகின்ற
திருநபியின் தலைமாட்டில் நின்றிருந்தும்
குருவதைக்குத் துணிந்த வன் கொடியோனும்
கைவாள் நழுவ உயிர்துடிக்கும் பக்தியால்
சொன்னான் ஒருசிறு வார்த்தை ‘அல்லாஹூ’.’
வள்ளத்தோள் (‘அல்லாஹூ’)
“எனக்கு நம்ம ஹெட்டோட முடிநிறைந்த கையை ஒரு தடவை முத்தமிடணும்” என்றாள் தீபா.
“எனக்கு இங்கிலீஷ் டிப்பார்ட்மெண்ட ஜான்கிட்டே உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்லணும்” என்றாள் ஜோதி