உடன்பிறந்தது
“இன்னொரு தடவை எங்க அண்ணனைப் பத்தி எதாச்சும் பேசினியா பாத்துக்கோ... உசுரோட இருக்க மாட்டே,” கையிலிருந்த விறகுக் கட்டையைக் கீழே எறிந்தான் வேலு. சாணம் தெளித்துக் கோலமிட்ட வாசற்தரையில் பட்டுத் தெறித்து உருண்ட விறகின் அசைவு அடங்கும்வரையில் மூச்சு வாங்க நின்றான்.
கலைந்த தலைமுடியை ஒதுக்கியபடி நிமிர்ந்த கோகிலா முறைத்தாள். எரிச்சல் மேலிட்டது. இடது உள்ளங்கையில் குத்தியிருந்த சிலாம்பைப் பற்களால் கடித்தான். ரத்தத்தின் உப்புச்சுவை ஒருகணம் அவனை உலுக்கியது. “பாட்டி...” கதவுக்குப் பின்னாலிருந்து மெதுவாக எட்டிப்பார்த்த தாமரை அழுகையுடன் பயத்தில் அழைப்பது கேட்டது. செருப்பை உதறியெறிந்துவிட்டு நடந்தான்.
“அப்பிடியே போயிரு உங்கண்ணன் பின்னாடியே. அவகிட்டயே போயிரு. இங்க யாரு இருந்தா என்ன செத்தா என்ன?” ஆத்திரத்துடன் கத்தினாள் கோகிலா. திரும்பிப் பார்க்காது நடப்பவன