ஐராவதம் மகாதேவன் (1930-2018) – இதழியலில் புதுமை கண்டவர்
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்தபோதிலும், சர்வதேச அளவில் தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் பிரபலமான பெயர் ஐராவதம் மகாதேவன். இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் ஆசிரியர்களாக இருந்த தினமணி நாளிதழுக்கும் ஆசிரியராக இருந்து (22.8.1987 - 23.8.1991) அவர்கள் விட்டுச்சென்ற நல்ல மரபுகளையும் பண்பாடுகளையும் கட்டிக்காத்துப் பெருமை சேர்த்தவர். கல்வெட்டு எழுத்தும் அச்சு எழுத்தும் அவரை ஆட்கொண்டன. தொல்லியல் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் தனது தனி முத்திரையைப் பதித்து நமது பெருமைக்குரியவராக இருக்கிறார்.
ஐராவதம் மகாதேவனின் பூர்வீகம் வரகூர். தஞ்சாவூர் ஸ்மார்த்த தமிழ் பிராமணர் குடும்பத்தில் பிறந்தவர். காவிரி நதிக்கரையில் நேமம் என்ற ஊரில் ஐராவதீஸ்வர் கோவில் உள்ளது. அவரது குடும்பத்தில் ஐராவதம் என்ற பெயர் பல தலைமுறைகளாக வைக