ஐராவதம் மகாதேவன் (1930-2018) – மொழி முதல் தேடியவர்
அண்மையில் காலமான ஐராவதம் மகாதேவன் தமிழ்ப் பிராமி என்ற பழந்தமிழ் எழுத்துமுறை பற்றிய ஆராய்ச்சியை மேலெடுத்து, தமிழ்மொழியின் தொடக்க காலத்தை நன்கு புரிந்துகொள்ள வழி செய்தார் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேபோல் சிந்துவெளி நாகரிகத்தில் வழங்கிய எழுத்துக்களுக்கு ஒருமுறையான தொடரடைவு (concordance) தொகுத்து வெளியிட்ட வகையிலும் அவருக்குப் பெருமையுண்டு. இருதுறைகளிலும் பல்லாண்டுகள் அயராது உழைத்தார் என்பதை வலியுறுத்த வேண்டும். தமது 88 ஆண்டுக்கால வாழ்க்கையின் பெரும்பகுதியை இவ்வாய்வுப் பணிக்காக அவர் அர்ப்பணித்தார்.
திருச்சி மாவட்டத்தில் நல்ல கல்விச்செல்வம் பெற்ற குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலேயே தமிழோடு வடமொழியையும் நன்றாகக் கற்கும் வாய்ப்புப் பெற்றிருந்தார். இம்மொழியறிவு அவரது பிற்கால ஆய்வுக்குப் பெரிதும் பயன்பட்டது. உயர்கல்வி முடித்து 24ஆம் வயதில் இந்திய அரசுப்பணியில் (IAS)&