இரு பெண்கள் இரு நாவல்கள்
முதலில் ஒரு விளக்கம். இதற்குக் காரணம் நான் இங்கே அறிமுகப்படுத்தப்போகும் இரண்டும் ஆங்கில நாவல்கள். அவை அகதிகள் பற்றி, அந்நிய நாட்டில் வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்களால் எழுதப்பட்டவை. ஒன்று, அகில் குமாரசாமியின் half Gods’; மற்றது ஷாரன் பாலாவின் boat People. இவை எந்த இலக்கிய வகையானது? அரசியல் அநீதிகள், மதக்கொடுமைகள், மொழி வற்புறுத்தல்கள் காரணமாக வெளிநாட்டுக்குச் சென்று புகலிடம் பெற்ற முதல் தலைமுறையினரின் ஆக்கங்களைப் புலம்பெயர் அல்லது புகலிட இலக்கியம் (exilic literature ) என்று அடையாளப்படுத்தலாம். ஆனால் அகிலும் ஷாரனும் புகலிடம் தேடியவர்கள் அல்லர்: அந்நிய தேசத்தில் வசிக்கும் அடுத்த தலைமுறையினர். இவர்கள் வசிக்கும் நாட்டின் குடியாளர்கள். அகில் அமெரிக்காவில் வசிக்கிறார். ஷாரன் கனடாவின் குடிமகள். ஆங்கிலம்தான் இவர்களின் முதல்மொழி. நேர்காணல்களில் யார் உங்களுக்கு இலக்கிய எடுத்துக்காட்டிகள் என்று கேட்டதற்கு