செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள் 1993
பதிப்பாசிரியர் - அம்பை
ரூ.180
முன்னுரையில் தன்னை ஒரு சாதாரண இந்தியப் பிரஜை என்று அறிமுகப்படுத்திக்கொள்ளும் செல்லம்மாள் தன் வாழ்க்கையின் ஆரம்பகால ஏடுகளைத் தன் குடும்பத்தாருக்காகத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து எழுதிய குறிப்புகளுக்குத் தன் 73ஆம் வயதில் முன்னுரை எழுதுகிறார். இதில் அவர் விவரமாக எழுதியிருக்கும் வாழ்க்கைப் பகுதிகள் பெண் என்ற முறையில் அவர் பட்ட அல்லல்களையும், தொடர்ந்து அவர் மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளையும் கூறுகின்றன. இந்த ஆண்டுகள் மட்டுமே இவர் மனத்தில் மேலோங்கி நிற்பதற்குக் காரணம் அவற்றின் பாதிப்பு மிக ஆழமாக மனத்தில் தேங்கியிருப்பதனாலும் அப்போது பேசாமல் விட்ட பல விஷயங்களைப் பேசியே ஆக வேண்டும் என்ற மனத்துடிப்பினாலும் இருக்கலாம். வெளிநாட்டிலும் வேறு இடங்களிலும் உள்ள தன் மக்கள் தன் வாழ்க்கையின் இந்தப் பகுதியைத் தெரிந