நவீன உரைநடையின் தனித்துவமான குரல்
இந்த வருடத்துக்கான சாகித்ய அகாதெமி விருது எஸ். ராமகிருஷ்ணனின் ‘சஞ்சாரம்’ நாவலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. “வாழ்க்கையின் பாதையில் எனக்கு முன்னரும் பலர் பயணித்திருக்கிறார்கள். இப்போது என் முறை. என்னுடைய அனுபவங்களை நான் உங்களுக்குச் சொல்கிறேன். நாளை நீங்களும் இந்தப் பாதையில் பயணிப்பீர்கள். இங்கு யாவும் அனுபவங்களே.” சில வருடங்களுக்கு முன் ஒரு தனிப்பட்ட உரையாடலில் எஸ். ராமகிருஷ்ணன் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள். சமூகத்தில் நிகழும் பொதுவான அனுபவங்களை அவர் குறிப்பிடவில்லை. மாறாக மானுடம் இதுவரை அறிந்திராத ஏதோவொன்றை, அதன் புதிர்த்தன்மையை ஆய்ந்து தனிமனித வாழ்வினை ஒளிரச் செய்வதே கலையின் அடிப்படைச் செயல்பாடு என்பது எஸ்ராவின் நம்பிக்கை. அதனடிப்படையில் எழுத்தை மட்டுமே தன் வாழ்வின் ஆதாரமாக்கிக் கொண்ட மனிதர். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி எழுத்தின் வழி உலகத்தோடு தான் ஆடும் பகடைய