வரலாற்றுத் தருணம்
அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிபவன் நான். என் மாணவர்களில் தொண்ணூறு விழுக்காட்டினர் முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வருபவர்கள். சிறுவயது முதலே உடல் உழைப்பில் ஈடுபட்டுக்கொண்டே பள்ளிப் படிப்பை முடித்தவர்கள். உயர்கல்விக்கு வந்த பிறகும் பகுதி நேரமாக உடல் உழைப்பு வேலைகளைச் செய்துகொண்டே படிக்கிறவர்கள். தமக்குரிய செலவைத் தாமே பார்த்துக்கொள்வது மட்டுமல்ல, பலர் தம் சம்பாத்தியத்தில் பெரும்பகுதியைக் குடும்பத்திற்குக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளவர்கள். பகலில் ஒருவேளை மட்டுமே உண்பவர்கள். ஆரோக்கிய உணவு என்பது அவர்களுக்குக் கனவே.
வருகைப் பதிவு, புத்தகம் வாங்குதல் உள்ளிட்ட நடைமுறையில் கடுமை காட்டினால் பலர் இடைநின்றுவிடுவார்கள். உழைத்துக்கொண்டே படிப்பதற்கேற்ற வகைப் படிப்புகளாக இலக்கியம், வரலாறு, பொருளியல் ஆகியவை கருதப்படுகின்றன. இளநிலைப் பட்டத்திற்கான மூன்று ஆண்டுகள் அவர்களுக்குக