தலைமுறைகள் பேசும்
தீபாவளி, பொங்கல், கார்த்திகை எனப் பண்டிகை களுக்குப் பணம் ஒதுக்கித் திட்டமிட்டுச் செலவழித்த நினைவு எனக்கு இல்லை. ஆனால், கண்காட்சி சமயத்தில் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பணத்தை அப்பா சேமித்துவைப்பார். எங்கள் குடும்பத்தில் அதுதான் மிகப்பெரிய திருவிழா.
நடுத்தரக் குடும்பத்தில் இவ்வளவு புத்தகங்களா என்று இரவல் வாங்கித் திருப்பித் தராதவர்கள் முதல் புத்தகங்களை வேடிக்கை மட்டுமே பார்த்துச் செல்பவர்கள்வரை எங்கள் வீட்டு நூலகத்தைப் பார்த்து மலைத்துப்போவார்கள். அந்த அளவிற்குப் புத்தகங்கள். அப்பாவிற்கு வாசிக்கப் பிடிக்கும்.
சிறுவயது முதலே பிரபல இதழ்களை வாசிக்கும் பழக்கம் அப்பாவிற்கு இருக்கிறது. ஆனால், தீவிர இலக்கிய வாசிப்புக்கு ஜே. தியாகராஜன் என்கிற அசோகமித்திரன்தான் முக்கிய காரணம்.
எங்கள் குடும்பம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டது. உறவினர்களில் யார் வேலை நிமித்தமாக