நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு காப்டன் ஆன வரலாறு
ஆங்கிலத்தில் இதை ‘பாப்புலர் மிஸ்கன் சப்ஷன்ஸ்’ வகையில் சேர்ப்பார்கள். எல்லா கன்னடிகர்களும் ஒன்று சேர்வார்கள், எல்லா மலையாளிகளும் ஒன்று சேர்வார்கள், ஆனால் தமிழர்கள் மட்டும் மூலைக்கு ஒருவராகப் போய் விடுவார்கள். நிஜாம் ரயில்வேயாக எங்கள் ஊரில் அதன் முக்கிய இரண்டாம் நிலைப் பணியாளர்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளில் முக்கியமானவை இரண்டு. லான்சர் பாரக்ஸ், காவல்ரி பாரக்ஸ். இவை முதலாம் யுத்த காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கும். மொத்தம் மூன்று வரிசைகள். இருபத்திமூன்று வீடுகள். இருபத்திமூன்று குடும்பங்கள். அதில் மூன்று பால்காட் அல்லது பாலக்காட்டுக் குடும்பங்கள். அவர்கள் தமிழை விட மலையாளம் நன்கு அறிவார்கள். அவர்களை மலையாளிகள் என்று அழைப்பதில் தவறேதும் இருக்காது. ஆனால், பண்டிகை மற்றும் நவராத்திரியின்போது கூட ஒருவர் வீட்டுக்கு ஒருவர் போகமாட்டார்கள். இவ்வளவுக்கும் க