இரண்டு சிறுகதைகள்
சாமான்ய வாழ்வின் நிகழ்வுகளால் ஆனது அசோகமித்திரனின் எழுத்துலகம். அன்றாட வாழ்வின் துயரங்களை நுட்பமாகவும் விரிவாகவும் வெளிப்படுத்துவதில் இவரது படைப்புகள் முதன்மையானதாக இருக்கின்றன. நெருக்கடி மிகுந்த தினப் பொழுதுகளையும் அதைக் கொண்டு செலுத்த மனிதர்கள் படும்பாடுகளையும் மிகையுணர்ச்சியில்லா மொழியில் புனைவாக்கியவர். தேவைக்கு அதிகமான சொல்லாடலோ, கதைக்கு உதவாத விவரணைகளோ இல்லாதவை இவரது படைப்புகள். வாழ்க்கையில் தற்காலிக சந்தோஷங்கள்கூடக் கைகூடாதவர்களை மையப்படுத்திய இவ்விரு சிறுகதைகளும் அலைக்கழிக்கப்படும் வாழ்வின் சாட்சியாய் இருப்பவை.பெருநகரச் சுழற்சியில் மீட்க வழியின்றிக் கைவிடப்பட்ட இம்மனிதர்களின் கதைகள் முகத்திலறையும் அழுத்தம் கொண்டவை.
‘ஐந்நூறு கோப்பைத் தட்டுகள்’ (1959): சையது அப்துல் காதர், தொழிலில் நொடித்து சுய அடையாளங்களைத் தொலைத்து ‘ரஜாக்கர்’ என்னும