பாரதியின் ‘சொல்’: கவிதையின் காலமும் முதல் வெளியீடும்
தேவர் வருகவென்று சொல்வதோ? - ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ? - உம்மை
யன்றி யொருபுகலு மில்லையே
எனத் தொடங்கி,
‘வலிமை, வலிமை’யென்று பாடுவோம் - என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்.
கலியைப் பிளந்திடக்கை யோங்கினோம் - நெஞ்சிற்
கவலை யிருளனைத்து நீங்கினோம்.
‘அமிழ்தம், அமிழ்தம்’ என்று கூவுவோம் - நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்.
தமிழிற் பழமறையைப் பாடுவோம் - என்றுந்
தலைமை, பெருமை, புகழ் கூடுவோம்.
என நிறைவுபெறும் கவிதை ‘சொல்’ என்னும் தலை