காதலில் கற்றது
நான் கவலையில் விழுவதற்கு
உனது காதல் எனக்குக் கற்றுத்தந்தது
நீண்ட நாட்களாகவே
ஒரு பெண்ணுக்காகக் காத்திருக்கின்றேன்
அவள் என்னைக் கவலையில் தள்ளவேண்டும்
அவளது தோள்களில் சாய்ந்து அழவேண்டும்
சிட்டுக்குருவியைப்போல
அவள் என்னைப் பொறுக்கியெடுக்கவேண்டும்
உடைந்து தெறித்த கண்ணாடித் துண்டுகளைப்
பொறுக்குவதைப்போல
உனது காதல்
தீய பழக்கங்களை எனக்குக் கற்றுக்கொடுத்தது
இரவில் ஆயிரம் தடவை
மதுக்கோப்பையைத் திறக்கின்றேன்
போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன்
குறிசொல்லும் பெண்களின் கதவைத் தட்டுகின்றேன்
வீட்டிலிருந்து வெளியேறி
நடைபாதையில் சுற்றித்திரிகின்றேன்
வாகனங்கள் உமிழும் ஒளிகளிலும்
மழைத்துளிகளிலும்
உனது முகத்தை நோக்கி வருகின்றேன்
அடையாளம் தெரியாத ஆடைகளுக்கு மத்தியில