கலகக் குரலின் ஆன்மீகம்

”என் வாழ்க்கையில இப்படி ஒரு கூட்டத்தைப் பார்த்ததேயில்லங்க; குறைந்தது ரெண்டு லட்சம் பேராவது வந்திருப்பாங்க; எல்லோர் முகத்திலேயும் அப்படி ஒரு பரவசம், அவர் பாடும் ஒவ்வொரு பாட்டுக்குப் பிறகும் மக்களிடம் உருவான எழுச்சி அதுக்குப் பின்னாடி எந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியிலேயும் பார்க்கவே இல்லை,” இப்படித்தான் 1990 இல் ஐதராபாத் நிஜாம் கல்லூரி மைதானத்தில் கத்தார் நடத்திய நிகழ்ச்சிபற்றி என் நண்பர் சொன்னார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குச் சற்று அதிகமான காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த பிறகு, அன்றைய முதல்வர் சென்னா ரெட்டி அறிவித்த சலுகைகளை அடுத்து முதல்முறையாக மக்கள் முன் வந்து கத்தார் தனது நிகழ்ச்சியை நடத்தினார். அந்த நிகழ்ச்சிபற்றி இன்றுவரை பிரமிப்போடு மட்டுமே பலரும் பேசி வருவதைக் கேட்கிறேன். இந்த வார்த்தைகள் வெறும் தனிநபர் கருத்து என்று மட்டும் சொல்ல முடியாதவை. ஒரு தலைமுறையை