காலத்தை அழிக்கும் ஆச்சரியம்
1990இல் சென்னை மீனம்பாக்கத்தில் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி மையத்தில் பத்து மாதப் பயிற்சி. ஒரு சிறிய இதயத்தாக்கிலிருந்து மீண்டிருந்த காலம் என்பதாலும் பயிற்சிக்குப் பிறகு எந்த ஊருக்கு அனுப்புவார்கள் எனத் தெரியாததாலும் பழவந்தாங்கலில் ஓராண்டு குடும்பத்துடன் இருக்கலாம் என முடிவுசெய்து, ஒரே நாளில் வீடும் குழந்தைகளுக்குப் பள்ளியில் இடமும் பிடித்து, அடுத்த இரண்டு நாட்களில் நாங்கள் சென்னைவாசி ஆனோம். அந்த வாரமே வண்ணநிலவன் வீட்டுக்குச் சென்றபோது, அவர் இரண்டு ஆச்சர்யங்களைத் தெரிவித்தார். ஒன்று: எங்கள் நண்பர் சுப்பிரமணிய ராஜுவின் வீடு இருந்த அதே பாரதியார் தெருவில்தான் நாங்கள் குடியேறியிருக்கிறோம். இரண்டு:
மா. அரங்கநாதன் வீடு மிக அருகில் இருக்கிறது. வண்ணநிலவன் கூறியிருந்த அடையாளத்தை வைத்துக்கொண்டு மா. அரங்கநாதனின் ‘அரணை’ கதையில் வரும், உயர்நிலைப் பள்ளி எதிரில்