இந்தியப் பொருளாதாரத்தின் ஞான மரபு
நிலைத்த பொருளாதாரம்
(கட்டுரைகள்)
ஜே.சி. குமரப்பா
தமிழில்: அ.கி. வேங்கடசுப்ரமணியன்
வெளியீடு:
இயல்வாகை பதிப்பகம்
குக்கூ குழந்தைகள் நூலகம்,
கயித்தமலை அடிவாரம்,
ஊத்துக்குளி & 638 751, திருப்பூர் மாவட்டம்.
பக்கம்: 160
விலை: ரூ.200
சவூதி அரேபியாவின் பாலைவனங்களில் வசித்துவரும் பழங்குடியினரை நாகரிகப்படுத்தும் முகமாக நவீன வசதிகள் உடைய ஒரே மாதிரி அடுக்ககங்களை நகரங்களில் கட்டியது அந்நாட்டரசு. அதில் வலுக்கட்டாயமாக அவர்களைக் குடியேற்றியது. ஆனால், இரண்டொரு நாட்களிலேயே “எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று குச்சியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் பாலைவன வாழ்க்கைக்கு மீண்டார்கள்.
நாம் வேண்டுமென்றால் இதைப் புரிந்துகொள்ளச் சுணங்கலாம். ஆனால், இயற்கைக்குள்