வாசலில் அமர்ந்திருந்தவர்
இன்று முழுக்க அசோகமித்திரனை நினைக்கும் நாள். ரொறொன்ரோவில் 18 யூன் 2016இல் நடந்த தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழாவில் அசோகமித்திரனுக்கு, அவர் எழுதிய ‘குறுக்கு வெட்டுகள்’ நூலுக்கு 500 டொலர் பரிசு வழங்கப்பட்டது. அவரால் பரிசை ஏற்றுக்கொள்ள ரொறொன்ரோவுக்கு வரமுடியவில்லை. அந்தப் பரிசுப் பணத்தை அவருக்கு அனுப்பும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது; நானும் அனுப்பினேன்; அவரும் கிடைத்தது என்று கடிதம் எழுதினார்.
தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த கணக்கு வழக்குகளைச் சரிபார்க்கும் கணக்காய்வு நிறுவனம் எனக்கு ஒரு கேள்வி அனுப்பியிருந்தது. ‘அசோகமித்திரனுக்கு அனுப்ப வேண்டிய 500 டொலர் பணத்தை நீங்கள் ஜெ. தியாகராசன் என்பவருக்கு அனுப்பியிருக்கிறீர்கள். காரணம் சொல்ல முடியுமா?’ வெள்ளைக்காரக் கணக்காய்வாளருக்குத் தமிழில் புனைப்பெயரில் எழுதுவோர் அதிகம், உண்மைப்பெயர் வேறாக இருக்கும் என்பதை எப்படிப் புரியவைப்பது? ஒரு சட்டவாளரைப் பிடித்து ‘அசோகமித்திரன் என்பவருடைய இயற்பெயர் ஜெ. தியாகராசன்,’ என்று எழுதி ஒரு சத்தியக் கடதாசி தயாரித்தேன். அந்த விசயமாக சட்டவாளருடன் பேசியபோத